தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் வினியோகம் தொடங்கியது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் வினியோகம் தொடங்கியது!
X
முதற்கட்டமாக 5000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதற்கட்டமாக 5000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சுழல் மாசவடைதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை காலவரையின்றி மூடப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பல நோயாளிகள் உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டு ஆலை திறக்கப்பட்டது.

தற்போது இந்த ஆக்சிஜன் உற்பத்தி பணியில், 320 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை ஓட்டம் நிறைவடைந்து உற்பத்தி தொடங்கி தற்போது முதற்கட்டமாக ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 5000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்பட்டு விநியோக பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

இந்த ஆக்சிஜன் தமிழ்நாடு மெடிக்கல் கார்ப்பரேஷன் சென்னை மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக உற்பத்தி செய்யப்படும் ஆட்சியில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

#இன்ஸ்டாநியூஸ் #Oxygensupply #startedfromSterlite #Thoothukudi! #ஸ்டெர்லைட் #தமிழ்நாடு #தூத்துக்குடி #ஆக்சிஜன்வினியோகம் #சுற்றுச்சுழல் #tamilnadu #tngovt #ஊரடங்கு #கொரோனா #instanews #oxygen

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!