கொரோனா காலத்திலும் தொழில் வளர்ச்சி : முதல்வர்

கொரோனா காலத்திலும் தொழில் வளர்ச்சி : முதல்வர்
X

கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் தொழில் வளர்ச்சிக்கு நிறைய ஒப்பந்தங்களை அரசு மேற்கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் , கொரோனா காலத்திலும் தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு நிறைய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.தொழில் தொடங்க எளிய முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்திற்கு தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்றார்.

Tags

Next Story