தூத்துக்குடி வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
X


தூத்துக்குடி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், ராஜலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி, தென்மண்டல ஐஜி முருகன், நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.கார் மூலம் புறப்பட்டு முதல்வர் ஸ்ரீவைகுண்டத்திற்கு புறப்பட்டு சென்றார். முதல்வருக்கு வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story
திருச்செங்கோடு: நிறைவடைந்த ஊராட்சி ஒன்றிய கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!