வாகனம் கவிழ்ந்து விபத்து - நிவாரணம் அறிவிப்பு

வாகனம் கவிழ்ந்து விபத்து - நிவாரணம் அறிவிப்பு
X

தூத்துக்குடி அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் கூலித் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 20 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பலத்த காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business