ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
X

தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பணிக்கான (யு.பி.எஸ்.சி) இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 63800 89119, 90422 60644 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வரும் பிப் 26-ம் தேதிக்குகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!