அதிமுகவிற்கு பின் பாஜக - கருணாஸ் எம்.எல்.ஏ
கோவில்பட்டியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுது. இதில் அக்கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது.இந்தியாவில் இருக்கு இலங்கை அகதிகளாக இருப்பவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். முக்குலத்தோர் சமூகத்திற்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியல் அழுத்தம் காரணமாக தமிழகத்தில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றும், முக்குலத்தோர் சமூகத்தினை கோரிக்கைகளை தமிழக அரசு புறந்தள்ளி வருகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்றால் முக்குலத்தோர் சமூகத்தின் கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து கருணாஸ் எம்.எல்.ஏ.செய்தியாளர்களிடம் பேசுகையில் கூவத்தூரில் என்ன நடைபெற்றது என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரியும், சசிகலா பற்றி இன்று கூறுபவர்கள் அன்று என்ன சொன்னார்கள் என்பது அனைத்து ஊடகங்களிலும் உள்ளது. பிரேமலதா விஜயகாந்த் கருத்து வரவேற்க கூடியது என்றும், எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றும், தேவரினம் என்ற அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது 26 ஆண்டுகால கோரிக்கை என்றும், இந்த கோரிக்கை தொடர்பாக பலமுறை சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் மனுவும் அளித்துள்ளேன்.மற்ற சமுதாய மக்கள் சுபிட்சமாக வாழவேண்டும் என்று முதல்வர் நினைக்கிறாரோ அதைப்போன்று முக்குலத்தோர் சமூகமும் வாழவேண்டும் என்று முதல்வர் நினைக்க வேண்டும் என்றும், எங்களுடைய கோரிக்கைகளை தேர்தலுக்கு முன்பு முதல்வர் நிறைவேற்ற வேண்டும், அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக முதல்வர் ஒரு சில சமூக மக்கள் சுபிட்சமாக வாழ்வதற்காக ஏதேனும் ஒரு அரசாணை வெளியிட்டால் அது அவருக்கும் வரக்கூடிய தேர்தலுக்கும், நல்ல ஒரு அம்சமாக அமையாது என்றும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதற்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா, இதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், ஜெயலலிதா, சசிகலா உருவாக்கிய இந்த ஆட்சிக்கு சிறு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான் ரெம்ப கவனமாக இருக்கிறேன், இந்த நிமிடம் வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக, அதிமுகவுடன் தோழமையுடன் இருக்கிறோம். அது தொடரும், சசிகலாவை தற்போது வேண்டாம் என்று கூறுபவர்கள் தான் அவரை பொதுச் செயலாளர் என்று கூறினர், காலத்தின் நிர்பந்தம் காரணமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். எத்தனை காலங்கள் வந்தாலும் உண்மை ஒருபோதும் உறங்காது. உண்மை ஒருநாள் வெளிவரும், அதிமுகவிற்கு பின் பாஜக இருக்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை என்றும், அதிமுக தலைமை சசிகலாவிற்கு சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவர்கள் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் பாஜக என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும் என்றும், பிரதமர் மோடி வல்லவராக இருந்தாலும் , தமிழகத்தில் வேறு ஒருவரை
முதல்வராக கொண்டுவர நினைத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பிரதமர் மோடியின் விருப்பத்திற்கு எதிராக வேறொருவரை தமிழகத்தின் முதல்வராக தீர்மானம் செய்தவர் சசிகலா என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது, ஜெயலலிதா மம்தா பானர்ஜி கட்சி, முதல்வர் என்ற பதவியில் இருந்தனர். எந்த ஒரு பதவியிலும் இல்லாத ஒருவரால் இப்பேர்ப்பட்ட காரியங்களையும் செய்ய முடியும் என்று உலகத்திற்கு நிரூபணம் செய்தவர் சசிகலா, சசிகலாவை எளிதில் எடை போடக்கூடாது காத்திருங்கள் என்றார். பேட்டியின் போது முக்குலத்தோர் புலிப்படை மாநில துணை பொதுசெயலர் பெருமாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலர் முருகன், துணை தலைவர் பொன்னுபாண்டியன், நகர செயலர் ஆறுமுகபாண்டியன், நகர தலைவர் செந்தில், ஒன்றிய செயலர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu