தூத்துக்குடியில் வேளாண் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் வேளாண் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
X

தூத்துக்குடியில் வேளாண் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி மருத்துவர் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடியில் வேளாண் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி மருத்துவ மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினார்கள். தூத்துக்குடி சிதம்பரநகர் மெயின் ரோட்டில் ஆர்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்கம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். சங்க தலைவர் சதாசிவம், துணைச் செயலாளர் வேல்முருகன் மாநகர உறுப்பினர் ஆறுமுகம்,சிஐடியு சங்கத் தலைவர் டி ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் ரசல் சிறப்புரையாற்றி பேசியதாவது,மாநில சுயாட்சிக்கு எதிராக ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக மத்திய அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனக்கிருக்கிற பெரும்பான்மை பயன்படுத்தி நிறைவே மாறாக மத்திய அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனக்கிருக்கிற பெரும்பான்மை பயன்படுத்தி நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்கள் இந்தியாவில் விவசாயத்தை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றுவிடும், கிராமப்புற விவசாய விளை பொருட்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றுவிடும்.

போராடுகிற விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் பேசி அவர்கள் முன் வைத்திருக்கிற நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக தவறான வாக்குறுதிகளை கொடுத்து விவசாயிகளை மத்திய சங்கம் ஏமாற்றப் பார்க்கிறது. எனவே மத்திய அரசாங்கம் இந்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் பிரம்மாண்டமாக தமது போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.வரும் 6ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராடுகிற விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல் போராட்டம் செய்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சிறை செல்ல முடிவெடுத்திருக்கிறோம் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!