தூத்துக்குடியில் தாயுடன் சிறுமி தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடியில் உடல் ஊனமுற்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இளைஞரை ஜாமீனல் வெளியே விடக்கூடாது என்று பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள்-சோலைபெருமாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கூலி தொழிலாளியான இவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்ற வாலிபர் இவர்களின் 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை சிறையில் அடைத்தனர்.
தற்போது சிறையில் இருக்கும் ஐயப்பனை ஜாமீனில் எடுப்பதற்க்கு அவரது உறவினர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஐயப்பன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவே அவரை சிறையில் இருந்து வெளியே விடக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று பாதிக்கப்பட்ட ஊனமுற்ற சிறுமி தனது தாயுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து போலீசார் அவர்களை மீட்டு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu