ஆயுதப்படையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு

ஆயுதப்படையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு
X

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவின்குமார் அபிநபு வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவின்குமார் அபிநபு 2020ம் ஆண்டுக்கான ஆய்வை மேற்கொண்டார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் உடனிருந்தார். அப்போது ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை துணைத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

பின் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து, ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் உடமைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை பார்வையிட்டு, அவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story
ai powered agriculture