உடலுறுதியை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

உடலுறுதியை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

தூத்துக்குடியில் உடலுறுதியை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.

வாகன புகையால் ஏற்படும் காற்று மாசுவை குறைப்பதற்கும், உடலுறுதியை வலியுறுத்தியும் மாசில்லா தமிழகம் உருவாக்குவோம் எனும் தலைப்பின் கீழ் மத்திய மாநில அரசுகள் பிட் இந்தியா திட்டத்தை ஊக்குவித்து வருகின்றன.அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் பிட் இந்தியா திட்டத்தின் கீழ் இன்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி ரோச் பார்க் முதல் முயல் தீவு வரை சென்று திரும்பி மீண்டும் ரோச் பார்க் வரும் வகையில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து கலந்துகொண்டார். இந்தப் பேரணியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டிச் சென்றனர்.

Tags

Next Story
ai healthcare technology