தூத்துக்குடியில் நாளை பிட் இந்தியா இயக்க சைக்கிள் ஓட்டம்
தூத்துக்குடியில் நாளை பிட் இந்தியா இயக்கத்தில் சைக்கிள் ஓட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருசக்கர வாகனங்களினால் ஏற்படும் மாசுவை தவிர்க்கும் வகையிலும், மக்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், மத்திய விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சகத்தின் உடலுறுதி இந்தியா விழிப்புணர்வு டிசம்பர் - 2020 என்ற திட்டத்தின் மூலம் உடலுறுதி இந்தியா மீதிவண்டி ஓட்டம் என்ற நிகழ்ச்சியின் மூலம் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வுகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் மாநகராட்சியின் சார்பாக வருகின்ற சனிக்கிழமை (டிச 26 ம் தேதி) அன்று ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளும் வகையில் ரோச் பூங்காவில் தொடங்கி முயல்தீவு வரை சென்று மீண்டும் ரோச் பூங்கா வந்தடையும் விதமாக (20கீ.மி) சைக்கிள் ஓட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சைக்கிள் ஒட்டுவது மூலம் காற்று மாசு குறைவதற்கும், சுற்றுப்புற நட்புச் சூழலை உருவாக்கவும் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான போக்குவரத்து முறையை மக்களிடையே ஊக்குவிக்கும் விதமாகவும் குறிப்பாக பொதுமக்கள் தங்களது உடற்தகுதியினை சுயமதிப்பீடு செய்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதாலும் மாநகராட்சி சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில்,கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களுக்கு சொந்தமான சைக்கிள்களுடன் நாளை (26ம் தேதி) அன்று காலை 7 மணிக்கு ரோச் பூங்காவிற்கு வருகை தந்து நிகழ்ச்சியில் பங்கு பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu