தூத்துக்குடியில் எம்ஜிஆர் நினைவு நாள் மௌன ஊர்வலம்

தூத்துக்குடியில் எம்ஜிஆர்  நினைவு  நாள் மௌன ஊர்வலம்
X

எம்ஜிஆர் நினைவுநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அதிமுகவினர் மௌன ஊர்வலம் நடத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மௌனஊர்வலம் நடைபெற்றது. எம்ஜிஆரின் நினைவுநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்கு அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஊர்வலம் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் வரை சென்றது.அதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!