தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் நீட்டிப்பு : தென்னக ரயில்வே அறிவிப்பு

தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் நீட்டிப்பு : தென்னக ரயில்வே அறிவிப்பு
X

தூத்துக்குடி மைசூர் சிறப்பு ரயில் சேவை வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் வரும் 31 ம் தேதி வரையும், தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் 01.01.2021 வரையும் இயக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பயணிகளின் வசதிக்காக மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் 01.01.2021 முதல் 30.01.2021 வரையும், தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் 02.01.2021 முதல் 31.01.2021 வரையும் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற 23.12.2020 முதல் மைசூர் - தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில்களில் கால அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து காலை 6:30 மணிக்கு பதிலாக காலை 6.35 மணிக்கும், மதுரையிலிருந்து காலை 7:35 மணிக்கு பதிலாக காலை 7.50 மணிக்கும், விருதுநகரிலிருந்து காலை 8.25 மணிக்கு பதிலாக காலை 8.40 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து காலை 9:10 மணிக்கு பதிலாக காலை 9.25 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 10.05 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கும் புறப்பட்டு முற்பகல் 11.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.10 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு பதிலாக மாலை 4.30 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து மாலை 5.07 மணிக்கு பதிலாக மாலை 5.02 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து மாலை 5.45 மணிக்கு பதிலாக மாலை 5.35 மணிக்கும், விருதுநகரிலிருந்து மாலை 6.30 மணிக்கு பதிலாக மாலை 6.35 மணிக்கும், மதுரையிலிருந்து இரவு 7.45 மணிக்கு பதிலாக 7.50 மணிக்கு புறப்பட்டு, பின்பு திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 9.10 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!