கிறிஸ்துமஸ் பண்டிகை, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் : எஸ்பி ஜெயகுமார்
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாவட்டம் முழுவதும் செய்யபட்டுள்ளது என மாவட்ட எஸ்பி ஜெயகுமார் பேட்டியின் போது கூறினார்.
தூத்துக்குடி காவலர் குடியிருப்பு பகுதியில் காவலர்களின் அவசர மருத்துவ உதவிக்கு 24 மணிநேரமும் குடியிருப்பில் இருந்து செயல்படும் வகையில புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை எஸ்பி ஜெயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் அதைபோல் புதிதாக துவங்கியுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார்.தொடர்ந்து செய்தியாளர்களுடம் பேசிய அவர் தற்போது வரை கொரானா தடையுத்தரவு நடைமுறையில் உள்ளது. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆலய வழிபாட்டிற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது.
இன்று தூத்துக்குடி ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது நண்பருடன் இரவு மது அருந்தியுள்ளார். மது போதையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் கம்பியால் தாக்கியதில் மாரியப்பன் இறந்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளி விரைவில் கைது செய்யபடுவார்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குற்ற செயல்களை தடுக்கவும் போக்குவரத்தை கண்காணிக்கவும் சிசிடிவி கேமராக்கள் மாட்டும் பணி தொடந்து நடைபெற்று வருகிறது. தற்போது மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தெருக்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu