அரசு, தனியார் மருத்துவ அலுவலர்களுக்கு பயிலரங்கு: ஆட்சியர் தொடக்கி வைப்பு
மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கிய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்
திருவாரூர் மருத்துவ கல்லூரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவ அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குடும்ப நல அறுவை சிகிச்சை தொடர்பான தர உறுதி நிலைப்படுத்துதல் மற்றும் காப்பீட்டு திட்டச்செயல்பாடுகள் குறித்த அரசு மற்றும் தனியார் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மயக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கத்தினை மாவட்ட ஆட்சியர் .ப.காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.திருவாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் அனைத்திலும் உத்தரவாதமும், பாதுகாப்பும் இருக்கும் வகையில் சிகிச்சைகளும் பாரமரிப்பு பணிகளும் அமைய வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்து சுகாதார முறையில் வளாகத்தினை பராமரித்திடவும் அனைவரும் முககவசம் அணிவதை உறுதி செய்கின்ற வகையில் மருத்துவ கல்லூரி பணியாளர்கள் கண்காணித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் மருத்துவ கல்லூரி அலுவலர் களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் குடும்பநலம் ஜே.ஜோஸ்பின்அமுதா, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், இணை இயக்குநர் நலப்பணிகள் .செல்வகுமார், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ஹேமச்சந்த் காந்தி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி நிலைய மருத்துவர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu