/* */

திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியில் தீவிரம்

திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியில் தீவிரம்
X

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது தவணை கொரோனா நிவாரண நிதி பெற, ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கினர்.

கொராணா பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து முதல் தவணையாக 2000 ரூபாய் மே மாதம் வழங்கினார்.

இதையடுத்து தற்போது 2வது தவணை 2000 ருபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான டோக்கன்கள் இன்று முதல் 14ஆம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று நாள் ஒன்றுக்கு 75 முதல் 200 பேருக்கு டோக்கன்கள் வழங்கி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ஜூன் 15 முதல் டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் அந்த நேரத்திற்கு சென்று பொதுமக்கள் 2000 ருபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

இந் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 728 ரேஷன் கடைகளில் கடைகளில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 943 ரேஷன் கார்டுகளுக்கு இன்று முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் தண்டலை ஊராட்சி பகுதியில் உள்ள கூட்டுறவு நகர், முல்லை நகர், தியாகராஜ நகர் , தியானபுரம் சாலை, பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது

இதேபோல் திருவாரூர் நகரில் காதிகாரதெரு, தென்றல் நகர், ராமநாதன் தெரு, முதலியார் தெரு,காமாட்சி அம்மன் கோவில் தெரு,நல்லப்பா தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர்

Updated On: 12 Jun 2021 9:30 AM GMT

Related News