திருவாரூரில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 830 வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

திருவாரூரில்  ஊரடங்கில் சுற்றித்திரிந்த 830 வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு
X

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் வாகனங்களில் வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருவாரூரில் ஊரடங்கில் விதியை மீறி சுற்றித்திரிந்த 830 வாகன்ங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவுகளை மீறி சாலையில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை வாகன சோதனை செய்து பிடித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் கடந்த 24-ந்தேதி முதல் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த முன்று தினங்களில் மாவட்டத்தில் சாலையில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த 830 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 830 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த24-ந்தேதி முதல் இன்று வரை மொத்தம் 830 இருசக்கர வாகனங்களும், 3 நான்கு சக்கர வாகனங்களும், மற்ற வாகனம் நான்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்று தினங்களில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வந்த நபர்கள் மீது 332 வழக்குகளும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்கள்மீது 33 வழக்குகளும் மொத்தம் 365 வழக்குகள் பதிவு செய்து ரூ 82,900 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் இதனை தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் வாகனங்களில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி.எச்சரிக்கை செய்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்