பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
X
போக்சோவி்ல் கைது செய்யப்பட்ட இளைஞர்.
திருத்துறைப்பூண்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அஜித் குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த தீபாம்பாள் புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(24). இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவர் பள்ளிக்கு வந்து செல்லும் போதெல்லாம் அவரை பின் தொடர்வதும், தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுப்பதாக இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் கண்டித்ததையடுத்து மாணவியை தூக்கி சென்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனடிப்படையில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்ததன் பேரில் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் போக்சோ சட்டப் பிரிவில் அஜீத் குமாரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்