திருத்துறைப்பூண்டி அருகே காட்டு முயல்களை வேட்டையாடிய 5 பேர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே காட்டு முயல்களை வேட்டையாடிய 5 பேர் கைது
X

திருத்துறைப்பூண்டி அருகே முயல்வேட்டையாடிய  ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே காட்டு முயல்களை வேட்டையாடிய 5பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே தொண்டியகாடு முதல் அதிராம்பட்டினம் வரை வனத்துறை சார்பில் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் அறிவொளி உத்தரவின்பேரில் நேற்று சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது மரவக்காடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 5 பேரை பிடித்து விசாரணை செய்ததில் இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்கோட்டை வேலாப்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையன் மகன்கள் முருகேசன்(24), ஜெயசங்கர்(37), சின்னத்தம்பி மகன் விக்னேஷ்(27), முத்து மகன் அன்பு(31), கணேசன் மகன் நாகராஜ்(32) ஆகியோர் என்றும் அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர்கள் வனத்தில் உள்ள முயல்களை வேட்டையாடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து 5பேர் மீதும் இந்திய வன உயிரின பாதுக்காப்பு சட்டம் 1972-ன்படி வன உயிரினங்களை வேட்டையாடி துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தலா ரூ. 15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட முயல்கள், பிடிக்க பயன்படுத்திய வலை மற்றும் இதர பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!