திருத்துறைப்பூண்டி அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
X

திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி அருகே ஒருவாரமாக குடிநீர் வராததால் காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சாத்தங்குடி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று திடீரென்று திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது .

மறியல் போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி- திருவாரூர் இடையே ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!