சீரமைக்கப்படாத சாலையை கண்டித்து நாற்று நடும் போராட்டம் நடத்திய பெண்கள்

சீரமைக்கப்படாத சாலையை கண்டித்து  நாற்று நடும் போராட்டம் நடத்திய பெண்கள்
X

திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூர் கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூர் கிராமத்தில் சீரமைக்கப்படாத சாலையை கண்டித்து பெண்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமருதூர் கிராமத்தில் ரயிலடி தெரு பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக சாலை செப்பனிடப்படாத காரணத்தால் மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த கிராமத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டதாகவும்,அதன் பின்பு பல ஆண்டுகள் கழித்தும் புது சாலை அமைக்கப்படாததால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவசர காலத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் வேதனையுடன் உள்ளனர்.

இது தவிர இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை பார்வையிட்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai ethics in healthcare