முத்துப்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

முத்துப்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த  இரண்டு பேர் கைது
X

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவர்.

திருத்துறைப்பூண்டி அருகே  முத்துப்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த 2பேரைபோலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான விதத்தில் நின்று கொண்டிருந்த இருவரை விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர். அப்போது அவர்களை சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

தொடர்த்து நடந்த விசாரணையில் அவர்கள் ஜாம்புவானோடை தெற்கு காடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (29) மற்றும் பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் வயது 42 ) என்பதும் இருவரும் 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து முத்துப்பேட்டை காவல் துறையினர் இருவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது