காவிரி டெல்டாவில் ஆமை வேகத்தில் பாசன மேம்பாட்டு பணிகள்: பி.ஆர்.பாண்டியன்

காவிரி டெல்டாவில் ஆமை வேகத்தில் பாசன மேம்பாட்டு பணிகள்: பி.ஆர்.பாண்டியன்
X

கீரக்களூர் பாசன மதகு மேம்பாட்டுப் பணிகளை பி.ஆர்.பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஒன்றியப் பகுதிகளில் அடப்பாறு, அரிச்சந்திரா ஆறுகளில் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட பணிகளின் நிலை குறித்து நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டரிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணியை மேற்கொள்வதற்கு மேட்டூர் அணையில் தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதை நம்பி உழவு பணிகள் மற்றும் தயாரிப்புப்பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.

தற்போது கொரோனா தாக்குதல் ஒரு பக்கம் இருந்தாலும் கிராமப் பகுதிகளில் விவசாயிகள் தீவிரமாக வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை பாசன வடிகால்களை தூர் வாருவதற்கு நீர்ப்பாசனத்துறை தீவிரம் காட்ட முன்வரவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வரும் அதேவேளையில் அதற்கு இணையாக வேளாண் பணிகளை தீவிரப்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்து தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்,தவறும் பட்சத்தில் குருவைக்கு மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் விலை நிலப் பகுதிகளுக்கு சென்றடைவதில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பதை எச்சரிக்கிறேன்.

ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தில் 2016 ஆம் ஆண்டில் ரூபாய் 1565 கோடி அனுமதிக்கப்பட்டு முதற்கட்டமாக 960 கோடி மதிப்பிலான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காவிரி வடிநில பகுதி ஆறுகளான வளவனாறு, அடப்பாறு,அரிச்சந்திரன்று, வெள்ளையாறு வேதாரண்யம் கால்வாய் உள்ளிட்டவற்றில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆறு ஆண்டுகாலமாக ஆமை வேகத்தில் திட்டமிட்டு காலதாமத படுத்தியதால் இரண்டாவது கட்ட நிதி விடுவிக்க படாமலேயே ௹ 600 கோடிக்கான பணிகள் தேர்வு செய்ய முடியவில்லை.

நீர்ப்பாசனத்துறை ஒரு குழுவை அனுப்பி விவசாயிகள் முன்னிலையில் ஆய்வு செய்து மதிப்பிடப்பட்ட பணிகள் முழுமையாக நடைபெற உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் கல்லணை கால்வாயில் நடைபெறுகின்ற பணிகளால் நிலத்தடிநீர் பறி போய் விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. எனவே இப்பணி குறித்து ஆய்வு செய்து நிலத்தடி நீர் பறிபோய் விடாமல் பாதுகாக்கும் வகையில் நீர் செறிவூட்டல் திட்டங்களை இணைத்து முழுமையாக நிறைவேற்ற தமிழக அரசு அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.

கீரக்களூர் பாஸ்கர், விளக்குடி சபரி,கோட்டூர் ரத்தினசாமி சேகர் உள்ளிட்ட விவசாயிகள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.மேற்கண்ட செய்தியை தங்கள் ஊடகம் பத்திரிகைகளில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டார்.

#instanews #tamilnadu #Turtle #speed #irrigation # development # works #CauveryDelta #p.r.pandian #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #காவிரிடெல்டாவில் #ஆமைவேகத்தில் # பாசன #cauvery #delta

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!