திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி
X

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பிப்ரவரி 19ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக இன்றையதினம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது .

இந்த பயிற்சி வகுப்பில் 100 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வாக்கு இயந்திரம் கொண்டு வாக்களிக்கும் முறை கொடுத்து ஆசிரியர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதேபோன்று முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கு நடைபெறும் தேர்தலில் பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு முத்துப்பேட்டை அரசு பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்