முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் வர தடை

முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் வர தடை
X
கொரோனா தொற்று பரவல் காரணமாக முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள சுற்றுலாத் தளமான லகூன் எனப்படும் அலையாத்தி காடுகளுக்கு தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அலையாத்தி காடுகளுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.தற்பொழுது தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக தேதி ஏதும் குறிப்பிடாமல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அலையாத்திக்காடுகள் ரேஞ்சர் தாஹிர் அலி தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்