ஒருதலைக் காதல்: முத்துப்பேட்டையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கல்லால் தாக்கி கொலை

ஒருதலைக் காதல்: முத்துப்பேட்டையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கல்லால் தாக்கி கொலை
X

 பொதியப்பன் மகன் சிவசங்கரன் (28)

முத்துப்பேட்டையில் ஒருதலை காதலால் பெண் கேட்டு தர மறுத்ததால் மோனிகா என்பவர் தூங்கிக் கொண்டிருந்த போது கல்லால் தாக்கி கொலை. குற்றவாளியை கைது செய்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை.

முத்துப்பேட்டையில் ஒருதலை காதலால் பெண் கேட்டு தர மறுத்ததால் மோனிகா என்பவர் தூங்கிக் கொண்டிருந்த போது கல்லால் தாக்கி கொலை. குற்றவாளியை கைது செய்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை பகுதியில் ராஜகுமாரி என்பவரது வீட்டில் தங்கி பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகள் மோனிகா 18 இவர் திருச்சி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்களின் உறவினர் திருக்களார் கிராமத்தை சேர்ந்த பொதியப்பன் மகன் சிவசங்கரன் (28) இறால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார் .

இவர் மோனிகாவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும் மோனிகாவை பெண் கேட்டதற்கு கொடுக்க மறுத்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த மோனிகாவை அம்மிக்கல்லை கொண்டுத் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த மோனிகா பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிகா அதிகாலை உயிரிழந்துள்ளார் .இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிவசங்கரனை அப்பகுதி மக்கள் பிடித்து முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலைக் காதலால் நடைபெற்ற கொலை சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பாக உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business