மேட்டூரில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் காமராஜ்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி, முத்துப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக சார்பாக 250 முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்பை முன்னாள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் முத்துப்பேட்டை பேரூராட்சியில் பணி புரியும் முன் களப்பணியாளர்கள் 250 பேருக்கு கொரானா நிவாரணமாக அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அதிமுக சார்பில் அமைச்சர் காமராஜ் வழங்கினார். பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது.
கடந்த கொரானா முதல் அலையில் அதிமுக அரசு சிறப்பாக கொரானா வை கட்டுப்படுத்தியது தேர்தல் அறிவித்த போது 450 ஆக இருந்த கொரானா தொற்று அதற்குப் பிறகு 35 ஆயிரம் வேகமாக தொற்று பரவியது.
கொரானா தொற்றுடைய அனைவரும் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது திருவாரூர் மாவட்டம் குறிப்பாக திருத்துறைப்பூண்டி பகுதிகளில் சிறிய அளவில் உள்ள வீடுகள் அதிகம் உள்ளன ஆகையால் கோவிட் கேர் சென்டர்களை அதிகப்படுத்தி கொரானா தோற்று உடைய நோயாளிகளை முழுமையாக குணமாகிய பிறகே வீட்டிற்கு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
அதேபோன்று கொரானா அதிகமாக பரவி வருவதாலும் அதனால் ஏற்படும் இழப்புகள் அதிகரிப்பதாலும் மக்களிடையே விழிப்புணர்வும் பயமும் ஏற்பட்டுள்ளது தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் தங்களை தற்காத்துக் கொள்ள முடியுமென மக்கள் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது ஆகையால் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க அதற்கான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும்
திருவாரூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முன்னேற்பாடாக விவசாயிகளுக்கு விதை உரம் உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கான வழியை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்
அதேபோல் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டும் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணியை ஆணையத்தின் மூலம் தமிழக அரசு பெற்று தரவேண்டும்
உழவர்களுக்கு கடந்த ஆண்டு உழவு மானியம் வழங்கியது போல் இந்த ஆண்டும் உழவு மானியம் அரசு வழங்க வேண்டும் என தெரிவித்தார்
இந்நிகழ்வில் நகர செயலாளர் .சண்முகசுந்தர். ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன்.மு.நகர்மன்றதலைவர் உமாமகேஷ்வரி. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைசெயலாளர் சுரேஷ்குமார். ஒன்றிய பொருளாலர் குமார். வழக்கறிஞர் செல்லபாண்டியன்.நகர இளைஞரணி மரியதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu