திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய தனியார் ஆஸ்பத்திரி

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள்   வழங்கிய தனியார் ஆஸ்பத்திரி
X
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் இணைந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியது.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு தனியார் மருத்துவமனைகள் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன..

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 80க்கும் மேற்பட்ட கொரானா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடாக உள்ளது இதன் தேவையை அறிந்து

திருத்துறைப்பூண்டி தனியார் மருத்துவமனைகள் சார்பாகவும் இந்திய மருத்துவக் கழகம் திருத்துறைப்பூண்டி கிளை சார்பாகவும் அரசு மருத்துவமனைக்கு 30, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன

இந்நிகழ்விற்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது இதில் ஒன்றியக்குழு தலைவர் அ.பாஸ்கர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஆர் எஸ் பாண்டியன் நகர மேம்பாட்டு குழு தலைவர் இந்திய மருத்துவ சங்கம் திருத்துறைப்பூண்டி கிளை முன்னாள் தலைவர் டாக்டர் T. ராஜா இந்திய மருத்துவ சங்கம் திருத்துறைபூண்டி கிளையின் தலைவர் மருத்துவர் சுரேஷ் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிவகுமார் மருந்தாளுநர் சதாசிவம் இந்திய கம்னியூஸ்ட் கட்சி நகர செயலாளர் முருகேசன் விவசாய சங்க பொறுப்பாளர் T.P.சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!