திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடந்தது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் தலைமையில் ஒன்றிய குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம் டெல்டா பகுதியில் சம்பா, தாளடி சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மானிய விலையில் உரம் , பூச்சிமருந்து உள்ளிட்ட உரங்களை விவசாயிகளுக்கு பயிர்கடன் திட்டத்தின் மூலம் வழங்குவது வழக்கம் ,
ஆனால் கூட்டுறவுத் துறையினர் சம்பா தாளடி சாகுபடிக்கு தேவையான உரங்களின் தேவையை குறித்து உரிய திட்டமிடல்கள் இன்மையால் உரம் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் பெரும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர் .
தனியார் கடைகளில் யூரியா மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 100 ம், டி.ஏ.பி. மூட்டை ஒன்றுக்கு ரூ. 250 கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ளது. ஆகவே இந்த நிலை போக்கிட சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநில அரசு பெற்று கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கிட வேண்டும் ,
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று 22 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு உரிய நிதி வராததால் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் அடிப்படை தேவைகளை செய்து தருமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியினை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu