திருத்துறைப்பூண்டி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு
X
நகராட்சி(பொ) ஆணையரை திட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்


திருத்துறைப்பூண்டி நகராட்சி பொறுப்பு ஆணையரை தகாத வார்த்தையால் திட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி பணியை புறக்கணித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் , திருத்துறைப்பூண்டி நகராட்சி பொறுப்பு ஆணையராக செங்குட்டுவன் என்பவர் உள்ளார்.இந்த நிலையில் இன்று கவிப்ரியன் என்பவர் திருத்துறைபூண்டி பேருந்து நிலையத்தில், தொலைக்காட்சி மூலம் விளம்பரம் செய்வதற்கு அனுமதி பெற்று நடத்தி வந்தார். தற்போது அந்த ஒப்பந்த காலம் நிறைவடைந்துவிட்டதாக தெரிய வருகிறது.

எனவே, அவர் செலுத்திய டெபாசிட் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு செங்குட்டுவன் அரசின் தணிக்கை அறிக்கை கிடைத்ததும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். குடிபோதையில் இருந்த கல்விபிரியன், பத்துக்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து வந்து, இப்போதே டெபாசிட் தொகை வழங்க வேண்டும் என ஆணையரை தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்தில் நுழைந்து அத்துமீறி நடந்து கொண்ட நபர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நகராட்சி ஊழியர்கள் திடீரென பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!