திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
X

திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருத்துறைப்பூண்டியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள அணிவகுப்பில் தமிழக வாகனங்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அனைத்து கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சியினர் தமிழக வாகனம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உலகநாதன், பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்