திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் சித்திரை தெப்ப திருவிழா

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் சித்திரை தெப்ப திருவிழா
X

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழா இன்று நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் சித்திரைத் தெப்ப திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் ஆலய சித்திரை பெருந்திருவிழா கடந்த 28-ந்தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்றையதினம் முக்கிய திருவிழாவான தெப்ப திருவிழா நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனையும் அதனைத் தொடர்ந்து கல்யாண சுந்தர சுவாமி திருமணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நிறைவு பெற்று கோவில் எதிர்புறம் உள்ள திருக்குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான தெப்பத்தில் அமர்ந்து அருள்பாலித்தார். தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare