திருத்துறைப்பூண்டியில் திருக்கார்த்திகை தீப திருவிழா

திருத்துறைப்பூண்டியில் திருக்கார்த்திகை தீப திருவிழா
X

திருத்துறைபபூண்டி சிவன் கோயிலில் நடந்த தீப திருவிழா

கார்த்திகை தீபதிருநாளையொட்டி  திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சொக்கப்பனை கொளுத்தி தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பிரசித்திபெற்ற திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் அகல்விளக்கு தீபம் ஏற்றி வைத்து சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போன்று பஞ்சலார்த்த கார்த்திகையை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் ஸ்ரீராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது ,அதனை தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!