பெண்ணை கொலை செய்ய முயற்சித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெண்ணை கொலை செய்ய முயற்சித்தவர் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது
X

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சங்கர்.

முத்துப்பேட்டை அருகே பெண்ணை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பக்கம் உள்ள ஜாம்புவானோடையை சேர்ந்தவர் சங்கர் (எ) மதிவாணன் (வயது 35,).இவர் முத்துப்பேட்டை காவல்சரக பகுதியில் புவனேஸ்வரி என்ற பெண்ணை முன்விரோதம் காரணமாக கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தனிப்படை அமைத்து கைது செய்துசட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்.இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் சங்கர் (எ) மதிவாணன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கர் என்கிற மதிவாணனிடம் வழங்கப்பட்டது.

மேலும் இதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால்அவர்கள் மீதும்,குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை செய்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!