திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றவர் மீது தாக்குதல்

திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றவர் மீது தாக்குதல்
X
அரிவாள் வெட்டில் காயம் அடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் மதுபான கடைக்கு மது வாங்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரைச் சேர்ந்த மாரிமுத்து( 47) என்பவர் மது வாங்குவதற்காக டாஸ்மாக் மதுபான கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் மீது வாகனம் உரசியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .அப்போது இரு சக்கர வாகனத்தின் முன்பகுதியை அந்த நபர் உடைத்துள்ளார். இருவருக்கும் வாய் தகராறு ஏற்படவே அந்த நபர் கத்தியால் மாரிமுத்துவின் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!