திருவாரூர்: மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தியும் ,கொரானா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி மடப்புரம், பள்ளங்கோவில் மற்றும் ஓவருர் முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டியில் மாநில துணைத்தலைவர் டி ஆர் எஸ் ஆர் சுப்பிரமணிய ஐயர் தலைமையில் அவரது இல்லத்தில் சமூக இடைவெளியுடன் 5 பேர் 5 பேராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"வேண்டாம் வேண்டாம் மதுக்கடைகள் வேண்டாம்.. கொரானா காலத்தில் மதுக்கடைகள் திறக்க வேண்டாம்" என கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு கணேச கவுண்டர் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கல்வி பிரியன்நீதிராஜா மாவட்ட துணைத்தலைவர் சித்திரவேல் மாவட்ட இளைஞரணி தலைவர் மனோகர், நகர தலைவர் இளங்கோ, மாவட்ட செயலாளர் ஏசி பாலு, மாவட்ட அமைப்பு செயலாளர் மோகன், மாவட்ட இளைஞரணி சரவணன், மாநில செயற்குழு தங்கத்தமிழன் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை ஒன்றியம் ஓவருரில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சுபாஷ் தலைமையில் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu