திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
X

திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரி அரசு கல்லூரி மாணவ மாணவிகள் திடீர் போராட்டம் நடத்தினர்.

திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவ மாணவிகள் திடீர் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரியில் அரசு பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி அமைந்துள்ளது .

இந்த கல்லூரியில் முதல்வர் சக்திவேல் அரசு அறிவித்துள்ள கட்டணங்களை விட கூடுதலாக மாணவர்களிடமிருந்து வசூலிப்பதாக குற்றம்சாட்டியும், கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலின் போது சேதமடைந்த வகுப்புகளை சரி செய்ய வலியுறுத்தியும் இன்றைய தினம் வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ai ethics in healthcare