பயிர் காப்பீடு வழங்காததால் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம்
கலைச்செல்வன்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் தனக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி மேற்கொண்டார். பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக அவரது பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தது.
அவர் பயிர் காப்பீடு செய்த நிலையில் அவரை தவிர்த்து அப்பகுதியில் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனக்கூறி சங்கேந்தி பகுதியிலுள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அவர் கீழே இறங்கினார் .இதனையடுத்து எடையூர் காவல்துறையினர் அவரை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu