திருத்துறைப்பூண்டியில் மாநில அளவிலான கராத்தே போட்டி

திருத்துறைப்பூண்டியில் மாநில அளவிலான கராத்தே போட்டி
X

திருத்துறைப்பூண்டியில் மாநில அளவிலான கராத்தே போட்டியை ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 100 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முத்தூஸ் கராத்தே கோபுடோ பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. இந்தபோட்டியினை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ. கே. எஸ். விஜயன் துவக்கி வைத்தார்.

போட்டியில் சென்னை, தூத்துக்குடி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் வழங்கினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்