திருத்துறைப்பூண்டியில் மாநில அளவிலான கோ-கோ போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு

திருத்துறைப்பூண்டியில் மாநில அளவிலான கோ-கோ போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு
X

திருத்துறைப்பூண்டியில் நடந்த மாநில கோ-கோ போட்டியில் வென்ற அணிக்கு கோப்பை வழங்கிய எம்எல்ஏ மாரிமுத்து

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகையுடன் சுழற் கோப்பைகளை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து வழங்கினார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உடற்கல்வி துறை சார்பில் மாநில அளவிலான கோகோ போட்டி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற இப்போட்டியை திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் பழனியப்பன் தொடங்கிவைத்தார்.

இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் முடிவில் சிவகங்கை, திருச்சி, ஈரோடு ஆகிய அணிகள் முறையே மூன்று இடங்களை கைப்பற்றினர். அவற்றிற்கு வெற்றிக் கோப்பையுடன் தலா 7000, 5000, 3000 பரிசுத்தொகையையாக திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து வழங்கி சிறப்பித்தார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட மீதமுள்ள 8 அணிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!