வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு: மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்கள்

வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு:  மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்கள்
X
திருத்துறைப்பூண்டி அருகே வீட்டிற்குள் புகுந்த ஐந்தரை அடி விஷப்பாம்பு தீயணைப்பு வீரர்களால் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராம பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது வீட்டிற்குள் சென்று ஐந்தரை அடி நீள பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த கணேசன் உடனடியாக திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறை பொறுப்பு அலுவலர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர், வீட்டில் பல்வேறு பகுதிகளில் தேடி, இறுதியாக வீட்டில் சமையல் அறை பகுதியில் இருந்த விஷப்பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர். தொடர்ந்து பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!