/* */

முத்துப்பேட்டையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஏலக்காய் பறிமுதல்

முத்துப்பேட்டையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

முத்துப்பேட்டையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற  ஏலக்காய் பறிமுதல்
X
பறிமுதல் செய்யப்பட்ட ஏலக்காய் மூட்டைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபருடன் போலீசார் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையிலிருந்து இலங்கைக்கு கடல்வழியாக ஏலக்காய் மூட்டை கடத்தப்படுவதாக முத்துப்பேட்டை கடலோர பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து நேற்று இரவு கடலோர காவல்படை ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரகுபதி சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயப்பன் சாமி நுண்ணறிவு பிரிவு காவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முத்துப்பேட்டை கோரை ஆற்றில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 260 கிலோ எடை கொண்ட ஒன்பது ஏலக்காய் மூடைகள் படகில் ஏற்றியதை பார்த்த அதிகாரிகள் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த நெய்னா முகமது என்பவரை உடனடியாக சுற்றிவளைத்து பிடித்தனர்.

பின்னர் ஏலக்காய் மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு முத்துப்பேட்டை சுங்க இலாகா அலுவலகத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 3.75 லட்சம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 19 Jan 2022 12:36 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  4. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  7. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா