திருத்துறைப்பூண்டியில் ரூ 73 ஆயிரம் : பறக்கும் படை பறிமுதல்
X
By - Sabarinathan.J,Reporter |4 Feb 2022 2:40 PM IST
திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் கணக்கில் வராத ரூ 73 ஆயிரம் பறிமுதல்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதிக்குட்பட்ட திருவாரூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் சோமசுந்தரம் தலைமையில் சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பிரசாத்(29) என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி 73 ஆயிரத்து 460 ரூபாய் ரொக்கப்பணம் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் நகராட்சி ஆணையரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu