முத்துப்பேட்டை அருகே ரூ. 8 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

முத்துப்பேட்டை அருகே ரூ. 8 கோடி  மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
X

முத்துப்பேட்டை அருகே  போதை பொருட்கள் கடத்திய ௨ பேரை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை அருகே ரூ.8 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வழியாக துபாய் மற்றும் வெளிநாடு களுக்கு அம்பர் கிரீஸ் எனப்படும் போதை பொருள் கடத்தப்படுவதாக போதை பொருட்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை- திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உப்பூரில் நுண்ணறிவு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது, அவ்வழியே சந்தேகத்திற் கிடமாக பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தபோது பையில் மறைத்து எடுத்து வரப்பட்ட 8 கிலோ திமிங்கல உமிழ்நீர் அம்பர் கிரிஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், முத்துப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜாகிர்உசேன் (52) என்பதும், அம்பர் கிரிஸை துபாய்க்கு கடத்திச் சென்று, அங்கிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக ஜாகிர் உசேன் கொடுத்த தகவலின் பேரில் கடத்தலில் தொடர்புடைய முத்துப் பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நகர தலைவர் நிஜாமுதின் (52) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், பிடிபட்ட அம்பர் கிரிஸின் உண்மை தன்மை குறித்து ஆராய ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத் துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரிஸ் சர்வதேச சந்தையில் 8 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்