திருத்துறைப்பூண்டி அருகே மத்திய அரசை கண்டித்து சிஐடியு சார்பில் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே மத்திய அரசை கண்டித்து சிஐடியு சார்பில் சாலை மறியல்
X

திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி கடைவீதியில் சிஐடியு சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

திருவாரூர் அருகே மத்திய அரசை கண்டித்து இன்று சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் ,கேஸ் உள்ளிட்டவற்றின் மீதான விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து இன்றையதினம் சிஐடியு சார்பாக வாகன நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி கடைவீதியில் சிஐடியு சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிஐடியு முக்கிய நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இந்த சாலை மறியல் காரணமாக திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!