கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய  ரவுடி குண்டர் தடுப்புச்சட்டத்தில்  கைது
X

மந்திரமூர்த்தி

திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கோவிலூர் பகுதியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்டசாதி ரீதியான முன்விரோதம் காரணமாக தொடர் கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்து வந்த நிலையில், அதனை தடுக்கும் விதமாகவும், முன்னெச்சரிக்கைநடவடிக்கை மேற்கொள்ளும் விதமாகவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்.

இந்நிலையில் மீண்டும் பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்ட கோவிலூரைச் சேர்ந்த ரவுடி மந்திரமூர்த்தி (24)என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் காய்த்ரி குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து ரவுடி மந்திர மூர்த்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
ai automation in agriculture