திருத்துறைப்பூண்டி அருகே பின்னத்தூரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது

திருத்துறைப்பூண்டி அருகே  பின்னத்தூரில் வீடுகளுக்குள்  மழை நீர் புகுந்தது
X
திருத்துறைப்பூண்டி அருகே பின்னத்தூரில் வீட்டிற்குள் புகுந்த மழைநீரை பெண் வெளியேற்றினார்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திருத்துறைப்பூண்டி அருகே பின்னத்தூரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருத்துறைப்பூண்டி அருகே பின்னத்தூர் கிராமத்தில் தெற்கு தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் தெரு மற்றும் வீடுகளில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து மூன்று வருட காலமாக இது போன்று மழைக்காலங்களில் வெள்ளம் சூழ்ந்து அவதியடைந்து வருவதாகவும், முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழை நீர் தேங்கி பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மழை நீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதோடு பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே உடனடியாக தண்ணீர் வடிவதற்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!