திருத்துறைப்பூண்டி: தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி: தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர் சங்கத்த்தினர். 

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கத்தின் சார்பாக, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கத்தின் சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வூதிய சங்கத்தின் சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஜெகவீரன், செயலாளர் செல்வகணபதி, தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்