திருத்துறைப்பூண்டியில் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டியில் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
X

திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி  மாணவர்களுக்கு போக்சோ சட்டம் பற்றி விழிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பாக போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் தமிழகத்தில் சமீபகாலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடைய ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த போக்சோ சட்டம் குறித்தும்,பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சர்மிளா இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவது குறித்தும், பெண் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!