திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணைத் தலைவர் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நகராட்சி துணைத் தலைவர் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரியின் வீடு.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகர் மன்றத் தேர்தலில் 11 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிபிஎம் நகர செயலாளர் ரகுராமனின் மனைவி ராமலோக ஈஸ்வரி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் திமுக தலைமை நேற்று நகராட்சி துணைத் தலைவராக சிபிஎம் சார்பில் ராமலோக ஈஸ்வரியை அறிவித்தது.
இந்த நிலையில் அவர் இன்று பதவியேற்க உள்ள நிலையில், அதிகாலை 2 மணி அளவில் அவரது வீட்டின் வாசலில் உள்ள காம்பவுண்டு சுவர் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டு தப்பியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து ராம லோகேஸ்வரியின் கணவர் ரகுராமன் கூறுகையில், இன்று பதவி ஏற்பு நடைபெற உள்ள நிலையில் தங்கள் வீட்டின் மீது இதுபோன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும், இதில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் எனவும், தங்களுக்கு காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu